மூடு

அலுவலக அமைப்பு

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதி செய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவலர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். நகராட்சிகளின் கமிஷனர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

மாவட்டத்தில் பொது சுகாதார அமைப்பு மற்றும் அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு பொது சுகாதார இணை இயக்குநரால் மேற்பார்வை செய்யப்பட்டு , மாவட்ட ஆட்சியர் மூலம் கண்காணிக்கப்படுகிறது .மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையின் கீழ் கிராம சுகாதார அமைப்பு மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களை நாகப்பட்டினம் பொது சுகாதார நலன் துணை இயக்குனர் கண்காணித்து வருகிறார்.

மாவட்ட ஆட்சியர் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு நடவடிக்கைகளை மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநரகம் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மூலம் கண்காணித்து வருகிறார். நாகப்பட்டினம் மீன்வள உதவி உதவி இயக்குநர் இந்த மாவட்டத்தில் உள்நாடு மற்றும் கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர். மாவட்ட ஆட்சியர் – தலைமை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் மூலம் கல்வி பணிகளை நிர்வகித்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் – நீர்ப்பாசனம் தொடர்பான வேலைகளை பொது பனி துறை மூலமாகவும் , நெடுஞ்சாலைகள் – சாலை நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்துகிறார் .