மூடு

நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்

நாகப்பட்டினம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்
தமிழ்நாடு அரசு 10.06.93 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 420ல் 1971 வருடத்திய நகரமைப்பு சட்டம் பிரிவு 10(1) ன் படி சேலம் உள்ளூர் திட்டகுழும பகுதிகளை வரையறுத்துள்ளது.10.02.97 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 56 ல் 1971 வருடத்திய நகரமைப்பு சட்டம் பிரிவு 10(4) ன் படி, பழய பகுதிகளுடன், அதை சுற்றியுள்ள 154 கிராமங்களையும் உள்ளடக்கிய பகுதியை நாகப்பட்டினம் உள்ளூர் திட்ட குழும பகுதியாக அறிவித்துள்ளது. இந்த உள்ளூர் திட்ட குழும பகுதி 17,74,122 மக்கள் தொகையை உள்ளடக்கிய 675.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக உள்ளது.01.09.93 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 759 மற்றும் 19.08.97 தேதியிட்ட அரசாணை எண்.282 ல் குறிப்பிட்டுள்ளவாறு மாவட்ட ஆட்சித்தலைவரை, தலைவராகவும், நகரமைப்புத்துறை இனை இயக்குநரை உறுப்பினர் செயலராகவும் கொண்டு உள்ளுர் திட்ட குழமம் உருவாக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் நாகப்பட்டினம் எட்டு பேருராட்சிகள் மற்றும் ஏலு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளட்க்கியுள்ளது.